ஒரு வருஷத்துக்கு மலைப் பகுதிகளில் பணி... ஆசிரியர்களுக்கு ஷாக் கொடுத்த பள்ளிக்கல்வித்துறை!!

By Narendran SFirst Published Jun 17, 2022, 11:44 PM IST
Highlights

ஆசிரியர்கள் அனைவரும் ஒரு வருட காலம் மலைப் பகுதிகளில் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும் உள்ளிட்ட மலை சுழற்சி வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்கக் கல்வி இயக்குனரகம் அரசாணையாக வெளியிட்டுள்ளது. 

ஆசிரியர்கள் அனைவரும் ஒரு வருட காலம் மலைப் பகுதிகளில் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும் உள்ளிட்ட மலை சுழற்சி வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்கக் கல்வி இயக்குனரகம் அரசாணையாக வெளியிட்டுள்ளது. இதுக்குறித்த பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை மலைப்பகுதிகளில் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பொருந்தும். பொது மாறுதலுக்கு முன்னதாகவே மலை சுழற்சி மாறுதல்கள் முதல் நாளிலேயே நடத்தப்பட வேண்டும். அனைத்து வகை ஆசிரியர்களும் மலைப்பகுதிகளில் பணியாற்ற பெரிதும் தயக்கத்துடன் உள்ளனர் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் குறைந்தது ஓராண்டு காலம் மலைப் பகுதியில் சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் மலைப் பகுதியில் உள்ள அதே பள்ளியிலேயே தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்தால் எழுத்துப்பூர்வமான கடிதம் பெற்று அதே பள்ளியில் தொடர அனுமதிக்கலாம்.

மலை இறக்கம் மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் எவரேனும் அதே பள்ளியில் தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் நிகழ்வில் அந்த ஆசிரியர்களை தொடர்ந்து அதே பணியிடத்தில் பணிபுரிய அனுமதித்து, மற்ற ஆசிரியர்களை அவர்களின் முன்னுரிமை ஒன்றியத்தில் பணியில் சேர்ந்த நாள் அடிப்படையில் சமவெளிப் பகுதிக்கு மாறுதல் அளிக்க வேண்டும். இவ்வாறு மாறுதல் அளிக்கும் போது மலையேற்றத்தால் ஏற்படும் காலிப் பணியிடங்களையும் ஏற்கனவே சமவெளிப்பகுதியில் உள்ள காலிப்பணியிடங்களை ஒட்டுமொத்த காலிப்பணியிடங்களாக காண்பித்தல் வேண்டும். மலை சுழற்சி ஒரு முழுசுற்று நிறைவடைந்த பின்னர் ஒன்றியத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மலை சுழற்சி மாறுதல் பதிவேட்டில் இருந்து மலைச் சுழற்சிக்கு உட்படுத்தப்படாத அனைத்து வகை ஆசிரியர்களும் மாறுதலின் மூலம் பணியேற்ற ஆசிரியர்கள் அந்த ஒன்றியத்தில் பணியில் சேர்ந்த நாளை முன்னுரிமைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

மலைப் பகுதி அமைந்துள்ள ஒன்றியங்களில், மலைப்பகுதியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களும் அவர்கள் மலைப்பகுதியில் விரும்பும் காலம் அல்லது துறை அனுமதிக்கும் ஓராண்டு வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவர். 100% பார்வையற்ற ஆசிரியர்கள், 40% மற்றும் அதற்கு மேல் மாற்றுத் திறன் கொண்ட ஆசிரியர்கள், மன வளர்ச்சி குன்றிய / மாற்றுத் திறன் கொண்ட தமது குழந்தைகளை பராமரிக்கும் ஆசிரியர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள். இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் மூளைகட்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயால் பாதிகப்பட்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில் தெளிவான நடவடிக்கைகளை வகுத்து கள அலுவலர்களுக்கு அனுப்பும்படி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

click me!