
பசு வதை தடை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அனைத்து கட்சியினரும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பசு,காளை, எருமை, ஒட்டகம், ஆகியவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த கூடாது என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரள, கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் சட்டத்தை நிறைவேற்ற முடியாது என தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என ஜகா வாங்கி விட்டார்.
தமிழக மாநில பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வழக்கம்போல் மத்திய அரசின் செயலுக்கு மணி ஆட்டியுள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று சொல்லி கொண்டிருக்க கூடிய ஒ.பி.எஸ் தரப்பினரும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை.
ஆனால் தமிழக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் போராட்டங்களையும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், பசு வதை தடை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அனைத்து கட்சியினரும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், விசிகவின் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி தலவைர் திருநாவுகரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், ஆர்.முத்தரசன், ஜவஹீருல்லா, கே.எம்.காதர் மொய்தீன், ஆகியோர் சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டனர்.
அந்த கூட்டறிக்கையில், மத்திய அரசின் எதேட்சதிகார செயலை எதிர்த்து மக்கள் வீதிகளுக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இறைச்சிக்காக பசு, காளை, எருமை, ஒட்டகம் விற்க தடை விதித்ததற்கு தலைவர்கள் கண்டம் தெரிவித்துள்ளனர்.
மத்திய வணத்துறையின் அறிவிக்கை மாநில உரிமைகளை உதாசினபடுத்துவது ஆகும் என கூட்டறிக்கையில் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.