
தற்போது சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சினிமாத்துறையை சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திரைப்படங்களுக்காக அட்டையினால் போடப்பட்ட செட்டுகள் தற்போது தண்ணீரில் மிதக்கின்றன. மேலும் மழை காரணமாக சண்டக்கோழி 2 , தானாசேர்ந்த கூட்டம் ஆகிய படங்களின் படப்பிடிப்பும், பல சிறு பட்ஜெட் படங்களில் படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு சில இயக்குனர்கள் மழைக்கு செட்டு போட்டு எடுக்கும் செலவு மிச்சம் என கருதி மழையின் போது எடுக்க வேண்டிய காட்சிகளை மிகவும் விறுவிறுப்புடன் படமாக்கி வருகின்றனர். மழை காரணமாக சென்னைக்கு வரும் விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதால். படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ள நடிகர் நடிகைகள் இங்கு வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. சென்னை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல நடிகர்கள் வெளியவே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.