
விருதுநகர்
வடக்கு மாவட்ட திமுக சார்பில் மழைக்காலத்திற்கு முன் அனைத்து கண்மாய்களும் தூர்வாரப்படும் என்று தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ தெரிவித்தார். தென்மேற்குப் பருவமழை ஆரம்பித்து விட்டது என்பது தெரியவில்லைப் போலும்.
விழுப்புரம் மாவட்டத்தில், திமுகவின் சிவகாசி வடக்கு, தெற்கு ஒன்றியம் சார்பில் ஆனையூர் பஞ்சாயத்துக்கு உள்பட்ட செங்குளம் கண்மாய் தூர்வாரும் பணி நடைப்பெற்றது.
இதற்கு மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வனராஜா தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியச் செயலாளர் தங்கராஜா முன்னிலை வகித்தார்.
கண்மாய் தூர்வாரும் பணியினை விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், திருச்சுழி எம்.எல்.ஏ.யுமான தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியது:
“திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்தப் பணி நடைப்பெற்று வருகிறது.
திமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் பங்களிப்புடன் ஒரு வாரம் இந்தப் பணி நடைப்பெறும்.
விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இதுவரை ஏழு கண்மாய்களில் தூர்வாரும் பணி நடைப்பெற்று வருகிறது.
மேலும், சில இடங்களில் கண்மாய்கள் தேர்வு செய்யும் பணியும் நடைப்பெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்த பின்னர் அந்த கண்மாய்களும் தூர்வாரப்படும்.
மழைக்காலத்திற்கு முன்னர் அனைத்து கண்மாய்களும் தூர்வரப்படும். அப்படி செய்தால்தான் மழை நீரை சேமிக்க முடியும். அது மக்களுக்கு பயன்படும்” என்று அவர் கூறினார்.
சிவகாசி தெற்கு ஒன்றியச் செயலாளர் விவேகன்ராஜ், நகரச் செயலாளர் முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.