அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம்...

First Published Mar 1, 2018, 8:17 AM IST
Highlights
All Indian Agricultural Workers Union demonstrated in Kanyakumari ...


 

கன்னியாகுமரி
 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க கன்னியாகுமரி மாவட்டக் குழுவினர் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் மலைவிளைபாசி தலைமை வகித்தார். சிவானந்தம், சாகுல் அமீது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசுவாமி கோரிக்கைகள் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "100 நாள் வேலை திட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்,

தினக் கூலியாக ரூ.205 வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முடிவில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் அமிர்தலிங்கம் நிறைவுரை ஆற்றினர்.

 

click me!