கார்த்தி சிதம்பரத்தை எந்த அரசியல் உள்நோக்கத்துடனும் கைது செய்யவில்லை - பொன்.ரா. - அட நம்புங்க பா!...

 
Published : Mar 01, 2018, 07:43 AM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
கார்த்தி சிதம்பரத்தை எந்த அரசியல் உள்நோக்கத்துடனும் கைது செய்யவில்லை - பொன்.ரா. -  அட நம்புங்க பா!...

சுருக்கம்

Karthi Chidambaram did not arrest with any political intentions - Pon.R

கன்னியாகுமரி

கார்த்தி சிதம்பரத்தை எந்த அரசியல் உள்நோக்கத்துடனும் கைது செய்யவில்லை என்று என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே கூட்டாலுமூட்டில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அந்தப் பேட்டியில் அவர், "ஆன்மிகப் புரட்சியை ஏற்படுத்திய காஞ்சி ஜெயேந்திரர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இறைவனிடம் இரண்டற கலந்துவிட்டார்.

தமிழக மீனவர்கள் 15 பேரை ஈரான் நாட்டு இராணுவம் சிறை வைத்திருந்தது. அவர்களை மீட்க எடுத்த நடவடிக்கையின் பேரில் 15 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு தமிழகம் வந்துள்ளனர்.

முதியோர் காப்பக விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மௌனம் சாதிப்பது ஏன்? என்று தெரியவில்லை.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு நான் அழுத்தம்  கொடுத்து வருகிறேன். இது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க தமிழக அரசு என்னை அழைத்தால் அவர்களுடன் இணைந்துச் செல்வேன்.

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை" என்று தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

நெஞ்சை உருக்கும் சோகம்..! அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7ம் வகுப்பு மாணவன் பலி..!
செங்கோட்டையனுக்கு சின்ன சங்கடமோ, மரியாதை குறைவோ வந்துடக்கூடாது..! புஸ்சியிடம் விஜய் போட்ட உத்தரவு