பயணிகள் ரயிலில் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்...! - ஒருவர் கைது...!

 
Published : Oct 02, 2017, 06:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
பயணிகள் ரயிலில் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்...! - ஒருவர் கைது...!

சுருக்கம்

alcohol plant seized in nagarcoil train by police

நாகர்கோவிலில் இருந்து புனலூர் சென்ற பயணிகள் ரயிலில் கஞ்சா கடத்த முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடம்  இருந்து 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

நாகர்கோவிலில் இருந்து புனலூர் சென்ற பயணிகள் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

இதையடுத்து புனலூர் ரயிலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஒருவர் கஞ்சா பொருளை கடத்த முயன்றது தெரியவந்தது. 

இதைதொடர்ந்து ரயிலில் இருந்த 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த முஜுப் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

முறையாக பராமரிக்கப்படாத அரசுப் பேருந்துகள்.. காவு வாங்கப்பட்ட 9 உயிர்கள்.. அரசுக்கு அன்புமணி கடும் கண்டனம்
தமிழகத்தையே உலுக்கிய விபத்து.. அரசு பேருந்து ஓட்டுநர் மீது 4 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு!