
உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கப்பட்ட போட்டி மாலை 6.30 மணி வரைத் தொடர்ந்தது. மொத்தமாக சுமார் 1000 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் சிறந்த வீரர், சிறந்த காளையின் உரிமையாளர் உள்ளிட்டோருக்கு கார், டிராக்டர், பைக் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
அதன்படி 19 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்த கருப்பாயூரணி கார்த்திக்கு முதல் பரிசாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார், ரூ.3 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது. அதற்கு அடுத்ததாக 16 காளைகளை அடக்கிய அபிசித்தருக்கு பைக், ரூ.2 லட்சம் ரொக்கம், மூன்றாவது பரிசு பெற்ற ஸ்ரீதருக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
இதே போன்று களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடிய காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.