எய்ம்ஸ் மாணவர் சரவணன் மரணம் - கொலை வழக்காக பதிவு

Asianet News Tamil  
Published : Dec 27, 2016, 02:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
எய்ம்ஸ் மாணவர் சரவணன் மரணம் - கொலை வழக்காக பதிவு

சுருக்கம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மாணவர் திருப்பூர் சரவணனின் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 திருப்பூரைச் சேர்ந்தவர், டாக்டர் சரவணன் மதுரையில், எம்.பி.பி.எஸ்., படிப்பு முடித்த இவருக்கு  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இடம் கிடைத்தது. 

கடந்த ஜூலை 1ம் தேதி, படிப்பில் சேர்ந்தார் ஆனால்  9ம் தேதி இரவு, தன் அறையில் சரவணன் மர்மமான முறையில், இறந்து கிடந்தார். அவரது அறை திறந்து கிடந்தது. இடது கையில் டிரிப்ஸ் ஏற்றியதற்கான அடையாளமும் இருந்தது.



டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.டி. படிக்க  இடம் கிடைப்பது மிகக்கடினம். தகுதி அடிப்படையில் இடம் பெற்ற அவரது மர்ம மரணம் பல சந்தேகங்களை ஏற்படுத்தியது.

இது குறித்து  சரவணனின் தந்தை கணேசன், திருப்பூர் கலெக்டரை சில மாதங்களுக்கு முன் சந்தித்து, தன் மகன் மரணம் குறித்த விசாரணைக்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என மனு கொடுத்தார். 

இந்நிலையில் மருத்துவ மாணவர் திருப்பூர் சரவணனின் மரணத்தை டெல்லி போஸீசார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். முதலில் இதை தற்கொலை வழக்காக காவல் துறையினர் பதிவு செய்திருந்தனர்.

இடது கை பழக்கமுள்ள சரவணன், எப்படி இடது கையில் விஷ ஊசி போட்டிருக்க முடியும் என்றும்,அவர் இறந்து கிடந்த அறை முழுவதும் ரத்தம் தோய்ந்த தடயங்கள் இருந்தது என்ற காரணங்களின் அடிப்படையில் இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என டெல்லி போஸீசார் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை சர்வாதிகாரமாக செயல்படுகிறது - வைத்தியலிங்கம் பேட்டி
இபிஎஸ்-க்கு நெஞ்சார்ந்த நன்றி.. ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்.. பாச மழை பொழிந்த டிடிவி தினகரன்!