இருதரப்பினருக்கும் இடையே காரசாரமாக வாக்கு வாதம் நடைபெற்றபோது, திடீரென நாம் தமிழர் கட்சியின் பிரசார வாகனத்தின் கண்ணாடியை அதிமுகவினர் உடைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அக்கட்சி வாகனத்தின் கண்ணாடியை அதிமுகவினர் தாக்கி உடைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்கு பதிவிற்கு இன்னமும் 2 தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மாவட்டம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரூராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் மருத்துவர். அசோகனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதிமுக தயவில் தான் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆனார்: தர்மபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
இந்நிலையில் அதே போல் நாம் தமிழர் கட்சியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மருத்துவர் அபிநயா அவர்களும் பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் தீவிர வாக்கு சேகரப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாலக்கோடு காவல் நிலையம் எதிரே அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே காரசாரமாக வாக்கு வாதம் நடைபெற்றதால் அங்கு இருந்த நாம் தமிழர் கட்சியின் பிரசார வாகனத்தின் கண்ணாடியை அதிமுகவினர் உடைத்துள்ளனர். காவல் நிலையம் முன்பு நடந்த இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரச்சாரம் ஓய்ந்த பிறகு ஆன்லைனில் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டு சிறை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை