
கரூர்
அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்து பீனிக்ஸ் பறவை போல எழுந்து நிற்கிறது. என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது தொடர்பாக புன்செய்புகழூர், காகிதபுரம், புன்செய்தோட்டக்குறிச்சி ஆகிய பேரூர் நிர்வாகிகளுடன் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன் தலைமை வகித்தார். முன்னாள் தொகுதிச் செயலர் எஸ். திருவிகா, இளைஞரணி செயலாளர் விசிகே. ஜெயராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கரூர் ஒன்றியச் செயலாளர் கமலக்கண்ணன் வரவேற்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்றார். அப்போது, அவர், “கரூர் மாவட்டம் மற்ற மாவட்டங்களை விட சிறியதாக இருந்தாலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை மற்ற மாவட்டங்களை விடச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்து பீனிக்ஸ் பறவை போல எழுந்து நிற்கிறது.
இரு அணிகளும் இணைய வேண்டும் என்றக் கட்சியின் அடிமட்டத் தொண்டனின் விருப்பத்தை எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் நிறைவேற்றி உள்ளனர்.
இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி ஆற்றில் தடுப்பணை, புகழூர் தனி தாலுகா, புகழூர் கூட்டுறவு வங்கிக்குச் சொந்தக் கட்டடம் ஆகிய கோரிக்கைகளை முதல்வரிடம் கூறி நிறைவேற்றித் தரப்படும் என்றார்.