மதுப்பிரியர்கள் வீசும் பாட்டிலில் 50 கோடி ரூபாய் வசூல்.. திமுக செய்யும் அடாவடி.. கொந்தளித்த ஜெயக்குமார்..

By Raghupati R  |  First Published Mar 3, 2024, 6:42 PM IST

மது பிரியர்கள் குடித்துவிட்டு வீசும் எச்சில் பாட்டிலில் கூட மாதம் 50 கோடி ரூபாய் வசூல் செய்யும் வகையில் திமுக அரசு முறைகேடான டெண்டர் நடத்த முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.


புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாளை ஒட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவின் தலைவர்களின் பிறந்த நாளை ஆண்டு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடும் கட்சி அதிமுக மட்டும் தான். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யும் இயக்கம் அது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மட்டும் தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் விளம்பர பலகைகளில் அதிமுகவின் தலைவர்களின் படங்களை காண்பித்து மக்களை ஏமாற்ற நினைப்பதாகவும், அது ஒரு கீழ்த்தரமான அரசியல் எனவும் இது ஒரு கண்டனத்துக்குரிய விஷயம் எனவும் தெரிவித்தார். புரட்சி தலைவர், புரட்சி தலைவி என் பெயரை கூறி பிரச்சாரம் செய்யும் பாஜகவினருக்கு வெட்கம் இல்லையா எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “மது பிரியர்கள் குடித்துவிட்டு வீசும்  மது பாட்டில்களை ஏலம் விடுவதற்காக விடப்பட்ட டென்டரில் மாபெரும் முறைகேடுகளும், குளறுபடிகளும் நடைபெறுகிறது.

Latest Videos

undefined

தமிழக அரசின் சார்பில் நடைபெறும் டாஸ்மார்க் கடைகளில் விற்பனை செய்யப்படும் பாட்டில்களை மீண்டும் சேமிக்கும் வகையிலான திட்டத்தின் கீழ் டெண்டர் விடுவதில் தமிழகம் முழுவதும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகளுக்கு டெண்டர் விடும் வகையில் தமிழக அரசு திட்டம் தீட்டி அதற்கான பணிகளை செய்து வருகிறது. மது பிரியர்கள் குடித்துவிட்டு கீழே போடும் எச்சில் பாட்டிலில் கூட 50 கோடி ரூபாய் அளவுக்கு சுருட்டி இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து உள்ளார்.

BJP candidate list 2024: பாஜக வேட்பாளர்கள் பட்டியல்; 195 பேர் பட்டியலில் தமிழக வேட்பாளர்கள் இடம்பெறவில்லை!!

ஆயிரம் கருணாநிதி, ஆயிரம் ஸ்டாலின், ஆயிரம் பிஜேபி வந்தாலும் அதிமுகவை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அதிமுகவின் தனித்தன்மை அடையாளத்தை வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவோடு சந்திப்போம். கூட்டணிக்கு வரும் கட்சிகளை வந்தால் வரவேற்போம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கையாளர்களுக்கும் ஊடகத்துறையினருக்கும் பாதுகாப்பில்லாத ஒரு பேய் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறதா?  என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

பத்திரிக்கை துறைக்கு விடப்பட்ட சவால் திமுகவுக்கு எதிராக செய்தி சேகரித்தால் பத்திரிக்கையாளரை தாக்குவது போன்ற சம்பவங்கள் திமுக ஆட்சியில் அதிகரித்து உள்ளது.பணநாயகத்தை வைத்து வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று விடலாம் என்ற மமதையில் மப்பில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்களையும், ஒளிப்பதிவாளர்களையும் தாக்கினால் திமுக அரசு தவிடு பொடி ஆகிவிடும்.  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தாய்மொழி வழக்காடு மொழியாக உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் தமிழை வழக்காடு மொழியாக திமுக அரசு சட்ட மசோதா கொண்டு வராதது ஏன்?

மத்திய அரசுடன் 17 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக எம்பிக்கள் தமிழை வழக்காடு மொழியாக உயர் நீதிமன்றத்தில் கொண்டுவர மசோதா கொண்டு வராதது ஏன் என்று கேள்வி எழுப்பினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.  தமிழக மக்களுக்கு செய்த துரோகத்தை வெளிப்படுத்தும் விதமாக தமிழக மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அரசு மண்ணை கவ்வும் வகையில் வாக்களிப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முதல் நடிகர் சுரேஷ் கோபி வரை.. பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்?

click me!