முதல்வரே தம்பட்டம் அடிப்பதை நிறுத்துங்க! அச்சத்துடன் நடமாடும் மக்கள்! சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! இபிஎஸ்!

By vinoth kumar  |  First Published Jun 30, 2024, 2:24 PM IST

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக மாவட்டப் பிரதிநிதியும் முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் அவர்கள் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன். 


விடியா ஆட்சியில் பொதுமக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக மாவட்டப் பிரதிநிதியும் முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் அவர்கள் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிர்த்துக்கொள்வதுடன், மறைந்த புஷ்பநாதன் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்! பதற்றம்! போலீஸ் குவிப்பு!

தமிழ்நாட்டில் விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். விடியா ஆட்சியில் பொதுமக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. பகல்-இரவு என்று பாராமல், மக்கள் எப்போதும் அச்சத்துடனே நடமாடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்க, தான் சட்டம் ஒழுங்கை சிறப்புற காத்து வருவதாக மு.க.ஸ்டாலின் அவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்வது நகைமுரண்.

இதையும் படிங்க:  முதல்வரை பக்கத்துல வச்சிக்கிட்டே இப்படி கிறுக்குத்தனமாக பேசலாமா? சீனியர் அமைச்சரை சீண்டிய பிரேமலதா..!

 புஷ்பநாதன் அவர்களைப் படுகொலை செய்தோரை துரிதமாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

click me!