உங்களுக்கு 15 வயது ஆயிடுச்சா? உடனடியா ஆதார் சேர்க்கை மையத்துக்கு போங்க…

Asianet News Tamil  
Published : Jan 04, 2017, 12:07 AM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
உங்களுக்கு 15 வயது ஆயிடுச்சா? உடனடியா ஆதார் சேர்க்கை மையத்துக்கு போங்க…

சுருக்கம்

உங்களுக்கு 15 வயது ஆயிடுச்சா? உடனடியா ஆதார் சேர்க்கை மையத்துக்கு போங்க…

தமிழகத்தில் 15 வயது பூர்த்தியான நபர்கள் இன்று முதல் ஆதார் நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு நேரில் சென்று உயிரிய தகவல்களை அளிக்க வேண்டும் என  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்க ஏதுவாக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவை சார்பில், மாநிலம் முழுவதும் 545 நிரந்தர சேர்க்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் கடந்த மாதம் 31-ம் தேதி வரை 9 லட்சத்து 96 ஆயிரத்து 924 பேருக்கு ஆதார் எண்ணுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய அரசின் வழிமுறைகளின்படி, ஆதார் எண் கிடைக்கப் பெற்று 15 வயது பூர்த்தியான நபர்கள் தங்களது உயிரிய தகவல்களை 2 ஆண்டுகளுக்குள் நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு நேரில் சென்று அளிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

எனவே 15 வயது பூர்த்தி அடைந்த, ஆதார் எண் பெற்றவர்கள் நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு இன்று முதல் நேரில் சென்று உயிரிய தகவல்களை அளித்து பயனடைய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த சேவைக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது என்றும் அரசு அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

சென்னைதான் எப்பவும் டாப்! போகிக்கும் பொங்கலுக்கும் சேர்த்து ரூ. 518 கோடி மது விற்பனை!
அனல் பறந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. குலுக்கல் முறையில் காரைத் தூக்கிய அஜித்! டிராக்டர் வென்ற குலமங்கலம் காளை!