
நடிகை சித்ராவின் மரணத்தில் அரசியல் தலைவருக்கு தொடர்பு இருப்பதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா, சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில், தனது கணவர் ஹேமந்த்துடன் தங்கியிருந்தார். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் மரணம் குறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ காமராஜ், நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா்.
பி ன்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் தற்போது ஒரு திடுக்கிடும் தகவலை சித்ராவின் கணவர் ஹேம்நாத் தெரிவித்துள்ளார். ந டி கை சித்ராவின் மரணத்தில் அரசியல் தலைவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சித்ரா மரணத்திற்கு காரணமான அரசியல் தலைவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசியல் தகைவர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகும். சித்ரா மரணத்திற்கு காரணமானவர்கள் தற்போது என் உயிருக்கு குறிவைத்துள்ளனர். எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை. உயிருக்கு பயந்து தற்போது வழக்கறிஞர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளேன்.
சித்ரா மரணத்திற்கு காரணமானவர்கள் அரசியல் அதிகாரமிக்கவர்கள் என்று தெரிவித்துள்ளார். ஹேம்நாத்தின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சித்ரா மரணம் தற்கொலை என்றிருந்த நிலையில் தற்போது அதில் அரசியல் தலைவர் தொடர்பு இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை அடுத்து காவல்துறையினரின் விசாரணையை தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை சித்ராவின் மரணத்திற்கு காரணமான அந்த அரசியல் தலைவர் யார்? அவருக்கு சித்ராவின் மரணத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளது.