விவசாயிகளுக்கு ஆதரவான முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு!

Asianet News Tamil  
Published : Apr 22, 2017, 12:14 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
விவசாயிகளுக்கு ஆதரவான முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு!

சுருக்கம்

actors association supports dmk strike

டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வரும் 25ஆம் தேதி அனைத்துக் கட்சிகளும் நடத்தும் முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை [16-04-2017] அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் பொது வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த முழு அடைப்பிற்கு தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு ஒருங்கிணைப்பு குழு, லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக, அனைத்துக் கட்சிகளும் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் எப்போது வெளியாகிறது தெரியுமா?
தவெக ஆட்சி அமைந்தால் இவர்கள் எல்லாம் அமைச்சர்கள்.. விஜய்க்கு எந்த துறை.. லீக்கானது லிஸ்ட்..!