
நடிகர் விஜயின் பிந்த நாள் அடுத்த மாதம் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை அடுத்து, நடிகர் விஜய்-ன் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கி உள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் அரசியல் பிரவேசம் செய்துள்ள நிலையில், நடிகர் விஜய்யும் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில், அவரது ரசிகர்கள், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தொடர்பாக போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
பொதுவாக விஜய் பிறந்த நாளின்போது, அன்னதானம், ரத்ததானம், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது போன்ற செயல்களில்தான் அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால், அண்மைக்காலமாகவே விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் அரசியல் புகுந்துள்ளது. விஜய் ரசிகர்கள் ஒட்டும் போஸ்டர்களில் அரசியல் வாடை சற்று
அதிகமாகவே காணப்படுகிறது.
நாளைய தமிழகமே..., மக்கள் இயக்க முதல்வரே, ஆளப்போறா தமிழன்... என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்று வருகின்றன. விரைவில் விஜய்-ன் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் வெகு உற்சாகத்தில் காணப்படுகின்றனர்.