கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பிற்கு நியாயம் கேட்ட பொது மக்கள்… ஓட ஓட விரட்டி அடித்த போலீஸ்!!

First Published Mar 8, 2018, 6:56 AM IST
Highlights
Accident at trichy tanjore main road lady dead police lath charge


திருச்சி அருகே  கா்ப்பிணி உயிரிழந்ததையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை காவல் துறையினா் தடியடி நடத்தி விரட்டியடித்தனா்.

திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளில்  சென்று கொண்டிருந்த தம்பதியரை காமராஜ் என்ற காவல் ஆய்வாளா்  எட்டி உதைத்தார்.  இதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த தம்பதிரில் உமா என்ற பெண் மீது வேன் ஏறியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  3 மாத கா்ப்பிணியான உஷா உயிரிழந்த தகவல் அறிந்த பொதுமக்கள் காவல் ஆய்வாளாரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனா்.

வாக்குவாதத்தின் போது காவல் ஆய்வாளா் குடிபோதையில் இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினா். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள்  3 ஆயிரம் போ் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினா். சாலை மறியல் நடைபெற்ற இடம் திருச்சி – தஞ்சாவூா் பிரதான சாலை என்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

போலீசார் போக்குவரத்தை சரி செய்ய முயன்றனர். ஆனாலும் ஆய்வாளர் காமராஜை கைது செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து செல்ல முடியாது என மறுத்துவிட்டனர்.

ஒருகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவலா்கள் மீது தண்ணீா் பாட்டில்கள், கற்களை வீசி எறியத் தொடங்கினா். இறுதியில் காவல் துறையினா் தடியடி நடத்தி 3 மணிநேரம் நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்ட நபா்களை கலையச் செய்தனா். மறியலின் போது காவலரின் வாகனம், அரசு பேருந்துகள் என 30 க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன.

இதில் 10 க்கும் மேற்பட்ட பொது மக்கள் காயமடைந்தனர். பலருக்கு மண்டை உடைந்தது. இந்த சம்பவத்தால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

click me!