மாநில அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் - தமிழக அரசு அதிரடி

By Dinesh TGFirst Published Dec 16, 2022, 5:05 PM IST
Highlights

மாநில அரசின் திட்டங்கள், சலுகைகள், மானியங்களை பெற அடையாள அட்டையாக ஆதார் அட்டையை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு துணை அங்கீகார முகமையான கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை நியமனம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசிதழில் கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையான அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் போன்றவை இணையதளம் மூலம் வழங்கி வருகிறது.

நாட்டிலேயே சிறந்த விளையாட்டு நகரமாக தமிழகத்தை உதயநிதி மாற்றுவார்..! பொன்முடி நம்பிக்கை

இந்நிலையில் தனிமனித அடையாளம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அடையாள அட்டை சமையல் எரிவாயு இணைப்பு, பொது விநியோகத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயம் வழங்க வேண்டும்.

2வது இன்னிங்ஸில் கில், புஜாரா சதம்.. வங்கதேசத்திற்கு மெகா இலக்கை நிர்ணயித்து வெற்றியை உறுதி செய்த இந்தியா

அந்த வகையில், தமிழக அரசின் திட்டங்கள், மானியங்கள், சலுகைகளைப் பெற ஆதார் அட்டையை வழங்க வேண்டும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் இல்லாதவர்களுக்கும் அரசின் பலன்கள் வழங்கப்படும், கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை மூலம் பயன்பளைப் பெறுவோரின் ஆதார் தகவல்களை அந்த துறையே உறுதி செய்யும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!