3 முறை கருக்கலைப்பு... அலைபாயுதே பாணியில் வாழ்ந்த காதலர்கள்! யாரென்றே தெரியாது என சொல்லும் காதலன்! பெண்மையை தொலைத்து வாடும் இளம் பெண்!

 
Published : Jul 24, 2018, 11:56 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
3 முறை கருக்கலைப்பு... அலைபாயுதே பாணியில் வாழ்ந்த காதலர்கள்! யாரென்றே தெரியாது என சொல்லும் காதலன்! பெண்மையை தொலைத்து வாடும் இளம் பெண்!

சுருக்கம்

A young woman complained against her husband

தனியார் கல்லூரி ஆசிரியை தன்னோடு பணியாற்றும் ஆசிரியருடன் ஏற்பட்ட நட்பால் காதலித்து,  வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் பண்ணிக் கொண்டு பின்னர் ஒன்றாக வாழாமல் உரிய காலம் வரும்வரை அவரவர் வீட்டில் தம்பதியாக  "அலைபாயுதே"  பட பாணியில்  வாழ்ந்த இவர்களுக்குள் ஏற்பட்ட தொடர்பால் 3 முறை கருக்கலைப்பு நடந்துள்ளது. இப்போது அந்த பெண்ணை யாரென்றே தெரியாது  சொல்லும் அளவிற்கு ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அரச்சலூர் சகாயபுரத்தை சேர்ந்த பெண் ஷீலா. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஷீலா, தான் கல்லூரியில் படிக்கும் போதே, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் முத்தூர் பெருமாள் கோயில் புதூரை சேர்ந்த கவின்குமாரை 7 வருடங்கள் மனப்பூர்வமாக  காதலித்துள்ளார்கள். அவரும் ஷீலாவை காதலித்தார்.

இந்நிலையில், கடந்த 2017 ஏப்ரல் 10-ம் தேதியன்று ஷீலாவும், கவின்குமாரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். கவின்குமாரின் குலதெய்வ கோயிலில்தான் மாலை மாற்றிக் கொண்டு, தாலி கட்டி திருமணம் கொண்டனர். பின்னர் ஒன்றாக வாழாமல் உரிய காலம் வரும்வரை அவரவர் வீட்டில் தம்பதியாக  "அலைபாயுதே"  பட பாணியில் வாழ்ந்து வந்தனர்.

என்னதான் பொத்தி பொத்தி இந்த ரகசியத்தை வெளியே தெரியாமல் பாதுகாத்தாலும் என்றாவது ஒருநாள் விஷயம் வெளியில் வந்தே தீரும்?  இந்த  ரகசிய திருமணம் நடந்த விவகாரம் கவின்குமாரின் பெற்றோருக்கு  தெரியவர  வீட்டில்  பூகம்பமே ஏற்பட்டது. இவர்களின் இந்த ரகசிய திருமணத்தை  கவின் குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு முக்கிய காரணமே, ஷீலா ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண் என்பதனால் தான்.

அதனால், கவின்குமார் குடும்பத்தினர் அவரை பலமுறை கண்டித்துள்ளனர். அதோடுமட்டுமல்லாமல், ஷீலாவை கூப்பிட்டு, "என் பையனுடன் மீண்டும் பேசாதே, அவனோடு சேராதே, அப்படி செய்தால் உன்னை கொன்றுவிடுவோம்" என  மிரட்டியிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் சளைக்காத ஷீலா நேராக தனது ஊரில் உள்ள அருந்ததியர் மக்கள் இயக்கத்தினரிடம் உதவியை நாடினார். அந்த இயக்கத்தின் முக்கிய பிரதிநிதிகளை கூட்டிக்கொண்டு, ஈரோடு எஸ்.பி. சக்திகணேஷிடம் வந்து நடந்த அனைத்தையும் சொன்னார். "என்னை எனது கணவர்கவின்குமாருடன் சேர்த்து வையுங்கள். அவரை உரிய பாதுகாப்பையும் வழங்குங்கள், என்று கேட்டு புகார் மனுவையும் தந்துள்ளார்.



இதில் பெரும் துயர சம்பவம் என்னன்னா? கவின்குமார் தற்போது ஷீலாவை வெறுத்து ஒதுக்குகிறாராம். பேச்சுவார்த்தையே இல்லையாம். அவரது பெற்றோர் அவரின் மனதை மாற்றிவிட்டதாக அந்த பெண் கண்ணீர் சிந்துகிறார். ஷீலாவின் கண்ணீருக்கு மற்றொரு காரணமும் இருக்கிறதாம், கவின்குமாருடன் திருமணம் செய்துகொண்ட அந்த பெண் கணவன் மனைவியாக வாழ்ந்ததில்  3 முறை கருக்கலைப்பு நடந்துள்ளது. ஆனால் கொஞ்சம் கூட கருணையே இல்லாத கவின்குமார் இப்போது ஷீலாவை யாரென்றே தெரியாது என்று சொல்கிறாராம் கவின்குமார். நம்பிக் காதலித்து தாலியை கட்டிக்கொண்ட காதலன் இப்படி வெறுக்க ஒதுக்குவதுமட்டும் இல்லை, தன் பெண்மையை தொலைத்துவிட்டு, தத்தளிக்கும் இந்த ஷீலாவின் கதி என்ன?

PREV
click me!

Recommended Stories

பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! பழனி முருகன் கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டிற்கு தனி கேரக்டர் உள்ளது..! பீகார் மாதிரி இல்லை.. அமித்ஷாவுக்கு உதயநிதி சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்