அப்பா வயதில் இருப்பவரை பார்க்காமலேயே ஃபேஸ்புக்கில் காதலித்த இளம் பெண்! சென்னையில் பரபரப்பு...

 
Published : May 15, 2018, 12:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
அப்பா வயதில் இருப்பவரை பார்க்காமலேயே ஃபேஸ்புக்கில்  காதலித்த இளம் பெண்! சென்னையில் பரபரப்பு...

சுருக்கம்

A young girl who fell in love with Facebook without seeing her father

பேஸ்புக்கில் போலி ஐடி மூலம் இளம்பெண்ணை காதலித்து,  ஏமாற்றிய அப்பா வயத்தில் இருப்பவர் வலுகட்டாயமாக தாலி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகள் சுமித்ரா அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வேலை நேரம் போக மற்ற நேரங்களில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றில் அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது, சென்னை தேனாம்பேட்டை இளங்கோ தெருவை சேர்ந்த வேலு என்பவர் பேஸ்புக் மூலம் சுமித்ராவுக்கு அறிமுகமாகி உள்ளார்.

இவருக்கு ஏற்கனவே பலவருடங்களுக்கு முன்பே திருமணமாகி, மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஆனால், வேலு இந்த விஷயத்தை மறைத்து அந்த இளம் பெண்  சுமித்ராவிடம் பழகியுள்ளார்.

மேலும், தனது ஃபேஸ்புக் சுயவிவர குறிப்பில் வயது, புகைப்படத்தை மறைத்து, வேறு ஒரு போட்டோவை போட்டுள்ளார். முதலில் நண்பர்களாக பழகிய வேலுவும், சுமித்ராவும் நாளடைவில் ஒருவரையொருவர் காதல்கோட்டை பட பாணியில் முகம் பார்க்காமலேயே காதலிக்க தொடங்கினர்.

இந்நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி நேரில் சந்திக்க வேண்டும் என்று சுமித்ராவை வேலு அழைத்துள்ளார். அதன்படி நேரில் வந்த சுமித்ரா, தனது அப்பா வயதில் இருக்கும் வேலுவை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அப்போது, அனிதா விருப்பம் இல்லாமல், வலுக்கட்டாயமாக அவரது கழுத்தில் வேலு தாலி கட்டியதாக கூறப்படுகிறது.

அவரிடம் இருந்து தப்பியோடிய சுமித்ரா இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அவர்கள் இதுபற்றி திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், சிறையில் இருந்து வெளியே வந்த வேலு, சுமித்ரா வீட்டிற்கு சென்று, மரியாதையாக என்னுடன் குடும்பம் நடத்த வரவில்லை என்றால், உன்னை கொலை செய்து விடுவேன், என அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து அவரது பெற்றோர் மீண்டும் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், வேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

செங்கோட்டையனுக்கு சின்ன சங்கடமோ, மரியாதை குறைவோ வந்துடக்கூடாது..! புஸ்சியிடம் விஜய் போட்ட உத்தரவு
எதிர்பாராத ட்விஸ்ட்.. மிகப்பெரிய சாதனை படைக்க போகும் தமிழ்நாடு! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!