
கோவை கார் வெடி விபத்து
கோவையில் கடந்த மாதம் 23ஆம் தேதி உக்கடம் பகுதியில் அதிகாலையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இந்த குண்டு வெடிப்பில் ஜமேஷா முபின் என்பவர் உயிர் இழந்தார். இதனையடுத்து நடைபெற்ற சோதனையில் அவரது வீட்டில் இருந்து வெடி பொருட்களுக்கு தேவையான வேதி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 6 பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் என்ஐஏக்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.
. கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் "மதம்" vs மதம் என்ற பெயரில் கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். மத வெறியால் ஏற்படும் விளைவுகள், படிப்பு மூலம் பகுத்தறிவை தேடு, இறைவன் பெயரில் எதுவும் செய்வோம் என்பது மூடத்தனம் உள்ளிட்ட பல்வேறு சிந்தனைகளை விதைக்கும் வகையில் ஒரு கவிதையை அவர் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள ஒரு கவிதையில்,
வெடிக்கச் செய்வது வீரம் அல்ல
வெடிக்க செய்வது வீரமல்ல, வெடித்துச்சிதறுவது பொருட்கள் மட்டுமல்ல; வெடிப்பு மூலம் வெறுப்பைத் தான் பெற முடியும் - படிப்பு மூலம் பகுத்தறிவைத் தேடு.
கட்டிக் காத்த சமூகக் கட்டமைப்பும் கூட,
"படிப்பு" வெடிப்பை செய்வதற்கல்ல. வெடிக்க செய்ய வேண்டியது மனித வெறுப்பை.
தாக்குவது தற்காப்பல்ல,
தாக்குண்டவன் தருணம் பார்ப்பான் திருப்பித் தாக்க - அதனால் - தாக்குவது சரியான தர்க்கம் அல்ல.
இறை நம்பிக்கை இயற்கை நிகழ்வு - அது பரினாம வளர்ச்சியில் பயத்தின் அடிப்படையில் வந்தது. ஆனால் இறைவன் பெயரில் எதுவும் செய்வோம் என்பது மூட நம்பிக்கை -அது கடவுளின் பெயரால் "கடை” நடத்துவது வியாபாரமயமாக்கல். கடவுளின் பெயரால் கருணை வளர்ப்பது - கடவுள் பணியாம் காக்கும் பணி - அது உலகம் உதிரச் செய்வது.
உலகம் உய்ய செய்வது.
கடவுளின் பெயரால் காவு வாங்குவது- கடவுள் பணியன்று, "காலன்" பணி - அது
மாநகர காவல் ஆணையர் எழுதியுள்ள இந்த கவிதை காவல்துறையினர் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வீதி தோறும் நூலகம், ஆட்டோ நூலகம் என வாசிப்பு தொடர்பாகவும் பல்வேறு முன்னெடுப்புகளை அவர் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்
கவர்னர் ஜெனரலாக நடந்துகொள்ளும் ஆளுநர்கள்..! 6 பேர் விடுதலையை சுட்டிக்காட்டி முரசொலி விமர்சனம்