குடும்பத்தையே கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர்..! சென்னையில் பதறவைக்கும் சம்பவம்..!

 
Published : Dec 12, 2017, 11:19 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
குடும்பத்தையே கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர்..! சென்னையில் பதறவைக்கும் சம்பவம்..!

சுருக்கம்

a person murder his family and suicide attempt in chennai

சென்னையில் தாய், மனைவி, குழந்தைகள் ஆகியோரை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு ஒருவர் தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மல் பகுதியில் திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் தாமோதரன். இவர் தனது தாய் சரஸ்வதி, மனைவி தீபா, குழந்தைகள் ரோசன், மீனாட்சி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தாய், மனைவி, குழந்தைகள் ஆகிய 4 பேரையும் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தாமோதரனும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மற்ற நான்குபேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்கொலைக்கு முயன்ற தாமோதரனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் குடும்பத்தை கொன்றுவிட்டு தாமோதரனும் தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தையே கொலை செய்துவிட்டு ஒருவர் தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ராமதாசை மீறி அன்புமணியை அமைச்சராக்கினேன்.. என்னைய பாத்து இப்படி சொல்லிட்டாரே.. ஜிகே மணி வேதனை
கொட்டும் பனியில் கஷ்டப்படாதீங்க.. தூக்கத்தை விரட்ட டிரைவர்களுக்கு இலவச டீ வழங்கும் டோல்கேட்