ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் தற்கொலை! கோபித்து சாப்பிடாமல் சென்ற கணவரால் நடந்த விபரீதம்!

Asianet News Tamil  
Published : Mar 13, 2018, 05:30 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் தற்கொலை! கோபித்து சாப்பிடாமல் சென்ற கணவரால் நடந்த விபரீதம்!

சுருக்கம்

A mother with a child committed suicide!

கோபித்து கொண்டு சாப்பிடாமல் கணவன் சென்றதால், வேதனை அடைந்த மனைவி குழந்தையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை, தரமணி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் கணபதி. கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி சுமித்ரா, கிருஷ்வா என்ற ஒன்றரை வயது மகன் உள்ளனர்.  நேற்றிரவு கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

ஆனாலும், சுமித்ரா இன்று காலை எழுந்து சமையல் செய்த வைத்தார். ஆனால், கோபத்துடனே இருந்த கணபதி, இன்று காலை சாப்பிடாமல் வேலைக்கு சென்று விட்டார். இதனால், சுமத்ரா மனவேதனை அடைந்துள்ளார். 

கணவன் பேசாமல் சென்ற நிலையிலும், தான் சமைத்து வைத்த உணவை சாப்பிடாமல் சென்றதாலும் சுமித்ரா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இதனால், தற்கொலை செய்து கொள்ள அவர் முடிவுக்கு வந்துள்ளார். ஆனால், குழந்தையை விட்டுச் செல்ல சுமித்ராவுக்கு மனமில்லை.

இதனால், தன்னுடைய குழந்தை கிருஷ்வாவை, முதலில் தூக்குப்போட்டு கொலை செய்துள்ளார் சுமித்ரா. அதன் பின்பு, குழந்தையின் அருகில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

வெகு நேரமாகியும், சுமித்ராவின் வீட்டின் கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தவர்கள் ஜன்னல் வழியாக வீட்டினுள்ளே எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது, குழந்தையும், சுமித்ராவும் தூக்கில் தொங்குவதைக் கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுமித்ரா மற்றும் குழந்தை கிருஷ்வாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை, மனைவி இறந்த தகவல் கேட்டு வந்த கணபதி, அவர்களது உடல்களைப் பார்த்து கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சை கலங்க வைத்தது.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்