ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரைபடம் தயாரிக்கும் போட்டி…! பரிசு எவ்வளவு தெரியுமா?

Asianet News Tamil  
Published : Sep 13, 2017, 04:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரைபடம் தயாரிக்கும் போட்டி…! பரிசு எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

A map drawing for the Jayalalitha memorial

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்கான மாதிரி வரைபடம் தயாரிக்கும் போட்டியில் 10 நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன.

சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்குப் பின்புறமாக ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தமிழக அரசு 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் நினைவிட வரைபடம் அமைத்துக் கொடுக்கும் போட்டியில் 10 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றில் தேர்வு செய்யப்படும் வரைபடத்திற்கு 80 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

நினைவிடத்திற்கான வரைபடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியாகும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நாங்க டப்பா எஞ்சினா? திமுக ஆட்சி ஓடாத ஓட்டை எஞ்ஜின்.. முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி!
நாங்க அம்மா வளர்த்த அண்ணன் -தம்பிகள்.. எல்லாத்தையும் மறந்துட்டோம்.. டிடிவி-இபிஎஸ் கூட்டாகப் பேட்டி..!