கள்ளக் காதலனுக்கு வேறு பெண்ணோடு கல்யாணம்! இரு குழந்தைககளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை...

Asianet News Tamil  
Published : Jan 29, 2018, 06:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
கள்ளக் காதலனுக்கு வேறு பெண்ணோடு கல்யாணம்!  இரு குழந்தைககளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை...

சுருக்கம்

A lady committs suicide with her 2 sons

கள்ளக்காதலனுக்கு இன்னொரு பெண்ணுடன் திருமணம் என்ற தகவல் அறிந்த ஈரோடு பெண் விரக்தியடைந்து தனது இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் அம்பலமானது.

ஈரோடு மாவட்டம், சம்பத் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஸ்ரீஜா. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவரது கணவர் ரவீந்திரன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். ஸ்ரீஜா, தனது மகன்கள் பிரணீத், சதீஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். ஸ்ரீஜா, தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீஜாவின் வீடு இன்று வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டில் வசிப்போர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அப்போது, ஸ்ரீஜா மற்றும் இரண்டு குழந்தைகள் சடலமாக கிடந்துள்ளனர். மேலும், ஸ்ரீஜா எழுதியதாக கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். உடல்களைக் கைப்பற்றிய போலீசார், ஈரோடு உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஸ்ரீஜா தனது மகன்களுக்கு விஷ ஊசி போட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்திதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
 

ஸ்ரீஜா வீராம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷனிஸ்டாக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது இவருடன் பணிபுரிந்த ரஞ்சித் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. தனிமையில் சந்தித்து இருவரும் காதலை வளர்த்த நிலையில் ரஞ்சித்தின் வீட்டில் திருமணத்துக்கு பெண் பார்த்து கொண்டிருந்த விஷயம் அறிந்த ஸ்ரீஜா மிகுந்த கவலையில் இருந்தாராம். இதற்கு ரஞ்சித்துக்கும் உடன்பாடு இருந்ததாம். இதனால் ஸ்ரீஜா, ரஞ்சித்துடன் வாக்குவாதம் செய்துள்ளார். எனினும் அவர் கேட்காததால் மனமுடைந்தார் ஸ்ரீஜா. தனது கள்ளக் காதலன் ரஞ்சித் தன்னை ஏமாற்றிவிட்டதாக கருதிய ஸ்ரீஜா, தனது இரு மகன்களுக்கும் விஷ ஊசி போட்டுள்ளார். அவர்கள் இருவரும் இறந்ததை உறுதி செய்து கொண்ட ஸ்ரீஜா இதுகுறித்து கடிதம் எழுதிவைத்து விட்டு தானும் விஷ ஊசி போட்டுக் கொண்டு உயிரிழந்துவிட்டார்.

ஸ்ரீஜா எழுதிய தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றிய விசாரணை போலீஸார் கள்ளக்காதலன் ரஞ்சித்தை தேடி வருன்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஆத்தாடி.. வெயில் இப்படி பொளக்குதே.. மழைக்கும் வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
தமிழகத்தில் NDA ஆட்சி உறுதி.. திமுக கொள்ளை கும்பல் தூக்கியெறியப்படும்.. மதுரையில் கர்ஜித்த பிரதமர் மோடி!