திருச்சியில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து; 2 பேர் பலி!

 
Published : Sep 03, 2017, 11:34 AM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
திருச்சியில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து; 2 பேர் பலி!

சுருக்கம்

A 3storey building collapses in Trichi

திருச்சியில், மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம், மலைக்கோட்டை அருகே மூன்று மாடிக் கட்டடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. வீடுகளில் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

இடிந்து விழுந்த கட்டடத்தில் 6 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். இந்த கட்டடம் பழைமையான கட்டடம் என்று கூறப்படுகிறது. 

கட்டடம் இடிந்து விழுந்த தகவல் அறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, 2 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!