15 வயது சிறுவனைக் கடத்தி குடும்பம் நடத்திய 22 வயது பெண்...!

Asianet News Tamil  
Published : Apr 20, 2018, 12:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
15 வயது சிறுவனைக் கடத்தி குடும்பம் நடத்திய 22 வயது பெண்...!

சுருக்கம்

A 15-year-old boy was kidnapped ... young woman arrested

22 வயது இளம் பெண் ஒருவர், 15 வயது பள்ளி மாணவன் மீது கொண்ட காதலால், மாணவனைக் கடத்திச் சென்று குடும்பம் நடத்திய சம்பவம் தருமபுரியில் நடந்துள்ளது. அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேடகட்டமவுடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தசரதன். இவரது மகன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தசரதனின் உறவினரின் மகள் வேலம்மாள் (22), கடந்த சில நாட்களுக்கு முன்பு, வேடகட்டமடுவிற்கு திருமண நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அப்போது தசரதன் மகனுடன் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனை அறிந்த தசரதன், வேலம்மாளைக் கண்டித்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகனைக் காணாததை அடுத்து, தசரதன் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் மகன் கிடைக்கவில்லை. இதனை அடுத்து, கோட்டப்பட்டி போலீஸ் நிலையதில் புகார் அளித்தார்.

இந்த நிலையில், தசரதனின் மகனைக் கடத்தி, வேலம்மாள் பெங்களுருவில் தங்கியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொர்ந்து பெங்களூரு சென்ற போலீசார் அவட்ரகள் இருவரையும் கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். 

மாணவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மாணவன் மீதான காதலால், அவனைக் கடத்திச் சென்று குடும்பம் நடத்தியதாக போலீசாரிடம் வேளம்மாள் கூறியுள்ளார். மாணவனை கடத்திய இளம் பெண் வேலம்மாள், போக்சோ பிரிவின்கீழ் கோட்டப்பட்டி போலீசார் கைது செய்து சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

திமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி.. கனிமக் கொள்ளை.. முதல்வர் ஸ்டாலின் மீது பரபரப்பு புகார்!
7 மாவட்டங்களில் துவம்சம் பண்ணப்போகும் கனமழை.. பொங்கல் அன்று மழை பெய்யுமா? வானிலை அப்டேட்!