
காஞ்சிபுரத்தில் 7-வது தேசிய வாக்காளர் தின விழா பேரணியை மாவட்ட ஆட்சியர் கெஜலட்சுமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இன்று 7-வது தேசிய வாக்களர் தின விழா என்பதால் அனைத்து இடங்களிலும் பேரணிகள் நடைப்பெற்று வருகிறது. மக்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தையும், அனைவரையும் வாக்களிக்க வேண்டும் என்று உணர்த்தவுமே இந்த பேரணிகள் நடைப்பெற்று வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்தி சாலையில் தேசிய வாக்காளர் தின விழா பேரணியை மாவட்ட ஆட்சியர் கெஜலட்சுமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் 5000-க்கும் மேற்ப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று பேரணிகள் காஞ்சிபுரத்தில் 13 இடங்களில் துவங்கப்பட்டு ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த பேரணியில் "இளைஞர்கள் மற்றும் எதிர்கால வாக்காளர்களுக்கு அதிகாரமளித்தல்" என்ற வாசகத்தை கையில் ஏந்தி மாணவர்கள் ஊர்வலாமாக சென்றனர்.