விதிமுறைக்கு 7 நாட்களே உள்ளன…!!! - பண அச்சடித்தும் தட்டுப்பாடு ஏன்…?

Asianet News Tamil  
Published : Dec 24, 2016, 11:56 AM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
விதிமுறைக்கு 7 நாட்களே உள்ளன…!!! - பண அச்சடித்தும் தட்டுப்பாடு ஏன்…?

சுருக்கம்

.

மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகி சுமார் 45 நாட்கள் ஆகியும் மோடி கூறிய 50 நாட்கள் என்ற கெடு நிறைவடைய இன்னும் ஒரு வாரமே உள்ளது. இந்த நிலையிலும், ஏடிஎம், வங்கி வாசல்களில் மக்களின் கூட்டம் சிறிதும் குறையவில்லை.

இதற்கு காரணம், போதுமான பணம் அச்சடித்து வெளியிடவில்லை எனன நினைத்தால், இந்த கட்டுரையை படித்து முடிக்கும்போது அந்த எண்ணத்தை நிச்சயம் மாற்றிக் கொள்ள முடியும். பணத் தட்டுப்பாடு குறித்து 10 விஷயங்களை பார்க்கலாம்.

1. நவம்பர் 10ம் தேதி முதல் டிசம்பர் 19ம் தேதி வரை ரூ.220 கோடி வங்கிகள் மூலம் புழக்கத்துக்கு வினியோகம் செய்யப்பட்டன.

2. இதில், 90 சதவீத நோட்டுகள் 2000 ரூபாய் நோட்டுகள். (மீதம் 10 சதவீதம்தான் 500 ரூபாய் நோட்டுகள்). டிசம்பர் 19ம் தேதி வரை மத்திய அரசு ரூ.4.07 லட்சம் கோடி மதிப்புள்ள பணத்தை வெளியிட்டுள்ளது.

3. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, நவம்பர் 8ம் தேதி மோடியின் அறிவிப்புக்கு முன்னரே ரூ.4.94 லட்சம் கோடி அளவுக்கு 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. நவம்பர் 8ம் தேதிக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள பணம் அச்சடிக்கும் ஆலைகளில் ரூ.2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

5. நவம்பர் 8ம் தேதியே ரூ.4.94 லட்சம் கோடி அளவுக்கு புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 19ம் தேதி வரை ரூ.4.07 லட்சம் கோடி மட்டுமே புழக்கத்தில் விடப்படக் காரணம் என்ன?

6. நவம்பர் 8ம் தேதி மூடப்பட்ட எத்தனையோ ஏடிஎம்கள் இன்னும்கூட திறக்கப்படாமல் தொடர்ந்து மூடப்பட்டே உள்ளது. அவை, புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கும் வகையில் தொழில்நுட்பம் மாற்றி அமைக்கப்படவில்லை என்று ஆர்பிஐ பதில் அளித்துள்ளது.

7. ஏற்கனவே 500 ரூபாய் நோட்டுகள் அச்சடித்ததில் சில பிரச்னைகள் இருந்ததால், தற்போது வேறு அச்சடிக்கும் ஆலைக்கு 500 ரூபாயை அச்சடிக்கும் பணி மாற்றப்பட்டுள்ளது. இதனால் 500 ரூபாய் அச்சடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

8. அனைத்து ஏடிஎம்களும் ஏன் உடனடியாக தொழில்நுட்பம் மாற்றிமைக்கப்பட்டு பணம் வழங்கும் பணிக்காக தயார் செய்யப்படவில்லை. ஒரு பக்கம் டெபாசிட்டுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வரும் மத்திய அரசு, பணம் எடுக்க விதித்த கட்டுப்பாடுகளை இன்னும் தளர்த்தாதது ஏன்?

9. பணப் பரிவர்த்தனையை டிஜிட்டல் முறையில் வெளியிடுங்கள் என்று கூறும் மத்திய அரசு, பொது மக்களுக்குத் தேவையான முழு பணத்தையும் வெளியிட தயாராக இல்லை. பணப் புழக்கம் தாராளமாகிவிட்டால், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மக்களை மாற்றுவது கடினமாகிவிடும்.  எனவே தான், தனது பணப் புழக்கமற்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கொள்கையை மத்திய அரசு ஏடிஎம்களில் இருந்து தொடங்கியுள்ளது.

10. எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என்ற நிலையை மாற்றி, எப்போதுமே பணமில்லாதவை தான் ஏடிஎம்கள் என்ற மன நிலைக்கு மக்களை தயாராக்கிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

11. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பண மதிப்புக்கு நிகராக புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படாது என்றும், பணப் புழக்கத்துக்கும், பணத் தேவைக்கும் இடையிலான இடைவெளியை, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பூர்த்தி செய்யும் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறிவிட்டார்.

12. இதன் மூலம், உயர் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படும் முன் இருந்த பணப் புழக்கம் இனி இந்தியாவில் வர வாய்ப்பே இல்லை என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

13. எங்கு போனாலும் ஏடிஎம் இயந்திரம் இருக்கிறதா என்று தேடிய மக்கள், இனி எந்த எடைக்குப் போனாலும் ஸ்வைப்பிங் இயந்திரம் இருக்கிறதா என்று தேடத் தொடங்கி விட்டார்கள்.

14. இப்படி டிஜிட்டல் பணப் பரிமாற்றம் என்ற கொள்கையைத் தான், மத்திய அரசு, ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் செயல்படுத்த முனைந்துள்ளது.

15. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, குறைந்த அளவிலான ரூபாய் நோட்டுகளை மட்டுமே மத்திய அரசு வெளியிடும் என்ற நிலையில், அவை பணப் பதுக்கல்காரர்களால் பதுக்கி வைக்கப்படும் நிலையில் ஏழை மக்கள் கையில் ரூபாய் நோட்டுகள் செல்வதே பெரும் பிரச்னையாக மாறும் அபாயம் இருப்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை முன்னெடுக்கும் மத்திய அரசு அதனை மிகுந்த பாதுகாப்பான முறையில் செயல்படுத்தி, பொதுமக்களின் உழைப்பினால் கிடைத்த பணத்தை பாதுகாக்கவும் அதிக முன்னுரிமை காட்ட வேண்டும் என்பதே பணத்துக்காக இன்னும் வரிசையில் நின்று கொண்டிருக்கும் சாமானியர்களின் வேண்டுகோளாக உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்
சிக்கன் விலை உச்சம்.. விஸ்வரூபமெடுத்த கறிக்கோழி விவசாயிகள் பிரச்சனை.. முக்கிய குழு அமைத்த அரசு!