விருதுநகரில் 63 இடங்களிலும் ஆழ்துளை கிணறுகள்; மதிப்பு ரூ.1 கோடியே 99 இலட்சத்து 60 ஆயிரம்…

Asianet News Tamil  
Published : Mar 01, 2017, 10:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
விருதுநகரில் 63 இடங்களிலும் ஆழ்துளை கிணறுகள்; மதிப்பு ரூ.1 கோடியே 99 இலட்சத்து 60 ஆயிரம்…

சுருக்கம்

63 places in Virudhunagar bore wells Worth Rs 1 crore 99 lakh 60 thousand

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 99 இலட்சத்து 60 ஆயிரம் செலவில் 63 இடங்களில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது என்று ஆட்சியர் சிவஞானம் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “விருதுநகர் மாவட்டத்தில் பருவ மழை பொழிவு குறைவின் காரணமாக ஊரக பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அறிக்கை மற்றும் கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி தயாரிக்கப்பட்ட எதிர்நோக்கு செயல்திட்டத்தின் அடிப்படையில் ஊரக பகுதிகளில் 63 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது.

இதன்படி ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் கணபதி சுந்தரநாச்சியார்புரம், கிழவிக்குளம், தளவாய்புரம், வடக்கு தேவதானம், சமுசிகாபுரம், தெற்கு தேவதானம், சொக்கநாதன்புத்தூர், கிருஷ்ணாபுரம் ஆகிய ஊராட்சிகளிலும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மல்லி, படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சிகளிலும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் கோட்டையூர், மூவறைவென்றான், ராமசாமிபுரம், சேதுநாராயணபுரம், இலந்தைக்குளம், கான்சாபுரம், காடனேரி, மகாராஜபுரம், மாத்தூர், வெள்ளப்பொட்டல் ஊராட்சிகளிலும்,

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளப்பட்டி, தேவர்குளம், ஆனையூர், ஈஞ்சார், வடபட்டி, புதுக்கோட்டை, செங்கமலநாச்சியார்புரம், சாமிநத்தம், சித்துராஜபுரம் ஆகிய ஊராட்சிகளிலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஏழாயிரம்பண்ணை, முத்தாண்டியாபுரம், டி.கான்சாபுரம், சல்வார்பட்டி, செவல்பட்டி, தாயில்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது.

சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அம்மாபட்டி, தோட்டிலோவன்பட்டி, வெங்கடாசலபுரம், சத்திரபட்டி, சின்னகாமன்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் சத்திரரெட்டியபட்டி, இ.முத்துலிங்காபுரம், நக்கலகோட்டை, சென்னல்குடி, பெரியபேராலி, ரோசல்பட்டி, சிவஞானபுரம் ஆகிய ஊராட்சிகளிலும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் செட்டிக்குறிச்சி, கோவிலாங்குளம், பாலவநத்தம், புலியூரான் ஆகிய ஊராட்சிகளிலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கல்குறிச்சி, எஸ்.மரைக்குளம், பாம்பாட்டி, வரலொட்டி, ஆகிய ஊராட்சிகளிலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் புலிக்குறிச்சி, விடத்தகுளம் ஆகிய ஊராட்சிகளிலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஆனைக்குளம் ஊராட்சியிலும் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுகிறது.

அவசர அவசியம் கருதி இந்த 63 இடங்களிலும் உடனடியாக குடிநீர் பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடியே 99 இலட்சத்து 60 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது” என்று ஆட்சியர் சிவஞானம் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மேடையில் மயங்கி விழுந்த எச்.ராஜா.. ICU-வில் தீவிர சிகிச்சை.. என்னாச்சு?
இந்த ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படாது.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!