"இனி +2 தேர்வில் வெறும் 600 மார்க் தான்" - பள்ளிக்கல்வித் துறை அதிரடி... தேர்வெழுதும் நேரமும் குறைப்பு..!!!

First Published May 22, 2017, 10:52 AM IST
Highlights
600 marks only in hsc


நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்களின் எதிர்காலம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கப்பட்டு விட்டது என எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருகிறது.

மாநில கல்வித் திட்டத்தில் படித்த கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள், மத்திய பாடத் திட்டத்தின்படி அமைக்கப்பட்ட நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்ற எதிர்ப்புக்குரல்களும் தமிழகம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. 

நீட் தேர்வு குறித்து மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்காமல் தமிழக அரசு மெத்தனம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு முறையில் பல அதிரடி மாற்றங்களை தமிழக அரசு புகுத்தி உள்ளது. 

இதன்படி இனி 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி  பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வில்  பாடவாரியான மதிப்பெண் 200க்குப் பதில் 100 ஆக இருக்கும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வில் மாணவர் எடுத்த மதிப்பெண்களைக் கூட்டி ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. 

மதிப்பெண்களையும் தாண்டி பாடத்திட்டத்திலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் புகுத்தப்படவுள்ளன.100 மதிப்பெண்ணில் 90 மதிப்பெண்களுக்கான கேள்வி  பாடத்தில் இருந்தும், மீதி 10 மதிப்பெண்கள் மாணவர்களின் செயல்திறன் தொடர்புடையதாக இருக்கும் என்றும் தெரிகிறது.தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2.30 மணி நேரமாகவும் குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தப் புதிய நடைமுறை குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!