ஷாக்கிங் நியூஸ்.. தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை..!

Published : Jun 02, 2022, 08:34 AM IST
ஷாக்கிங் நியூஸ்.. தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை..!

சுருக்கம்

தமிழகத்தில் மே 5ம் தேதி முதல் 10, 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 31ம் தேதி வரை நடைபெற்றது. கொரோனா தொற்றுக்கு பிறகு நடந்த பொதுத்தேர்வு என்பதால் அதிகளவில் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில், இதுதொடர்பான முழு விவரம் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் நடைபெற்ற 10, 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொத்தம் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் மே 5ம் தேதி முதல் 10, 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 31ம் தேதி வரை நடைபெற்றது. கொரோனா தொற்றுக்கு பிறகு நடந்த பொதுத்தேர்வு என்பதால் அதிகளவில் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில், இதுதொடர்பான முழு விவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை.12ம் வகுப்பு தேர்வுகளில் 1,95, 292  மாணவர்களும், 11ம் வகுப்பு தேர்வில் 2,58,641 மாணவர்களும் லட்சம், 10ம் வகுப்பு தேர்வில் 2,25,534 மாணவர்கள் பங்கேற்கவில்லை. 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொத்தம் 6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் என்று பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று இடைவெளிக்கு பிறகு நடத்தப்பட்ட பொதுத்தேர்வுகளில் இவ்வளவு மாணவர்கள் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து ஆய்வுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒரு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. அதில், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த தேர்வுகள் முடிவுக்கு பிறகு உடனடியாக ஜூலை மாதத்தில் உடனடி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அந்த தேர்வுகளில் இந்தத அனைத்து மாணவர்களையும் பங்கேற்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்மந்தப்பட்ட அனைத்து மாணவர்களையும் கண்டறிந்து  தேர்வுகளில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த பெலிக்ஸ் ஜெரால்டு! சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய விஜய்! தவெகவினர் குஷி!
எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது