உயிர்த்துடிப்பும் ஊக்கமும் நிறைந்த எழுச்சிமிக்க பகுதி .. தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளிய சீன தூதர்..

Published : Jun 01, 2022, 06:33 PM ISTUpdated : Jun 01, 2022, 08:53 PM IST
உயிர்த்துடிப்பும் ஊக்கமும் நிறைந்த எழுச்சிமிக்க பகுதி .. தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளிய சீன தூதர்..

சுருக்கம்

உயர்த்துடிப்பும் ஊக்கமும் நிறைந்த எழுச்சிமிக்க பகுதி தமிழ்நாடு என்று இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்திருந்த இந்தியாவிற்கான சீனா தூதர் சன் வெய்டாங், சிப்காட் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும் தமிழ்நாடு அரசின் தொழில்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்றார். 

இந்நிலையில் அவர் தனது தமிழ்நாடு பயணம் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் , “நான் விமானத்திலிருந்து இறங்கியுடன் தமிழ்நாட்டின் வெப்பத்தை என்னால் உணர முடிந்தது. அங்கு இருக்கும் மக்கள் மற்றும் தொழிற் பூங்காகள் மிகவும் அற்புதமாக அமைந்திருந்தது.

 

தமிழ்நாடு-சீனா இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் என்னுடைய இந்தப் பயணம் இருந்தது” எனப் பதிவிட்டுள்ளார். கடந்த  2019ஆம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸி ஜிங்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றது. பல்லவர் கால கலை சிற்பங்கள் குறித்தும், அதன் சிறப்பு குறித்தும் பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஜின்பிங்குக்கு விளக்கினார்.

தமிழர்களின் சிற்பக்கலை திறமை குறித்து வியந்து கேட்டார் சீன அதிபர். பின்னர் அர்ஜூனன் தபசு முன்பு நின்றபடி இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சங்க காலத்தில் இருந்தே தமிழகம்- சீனாவிற்கு இடையேயான உறவு தொடர்ந்து வருவதாக கூறுகின்றனர். போதி தர்மர் மாமல்லபுரத்தில் இருந்து கிமு 5 ஆம் நூற்றாண்டில் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. நர்சிம்மவர்மன்-II மன்னர் தன்னுடைய ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து சீனாவிற்கு தூதரை அனுப்பியிருந்ததாக வரலாற்று ஆய்வாளர்க தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க: அளவுக்கு அதிமான எதிர்பார்ப்பில் பொதுமக்கள்...! அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அடுத்த 3 மணி நேரம்! எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுது தெரியுமா?
லேப்டாப், செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகத்தில் நாளை 5 முதல் 8 மணி நேரம் மின்தடை