புழக்கத்தில் 50 ரூபாய் கள்ள நோட்டுகள்; பீதியை கிளப்பிய வதந்தி…

 
Published : Feb 16, 2017, 07:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
புழக்கத்தில் 50 ரூபாய் கள்ள நோட்டுகள்; பீதியை கிளப்பிய வதந்தி…

சுருக்கம்

நாகப்பட்டினம்,

நாகப்பட்டினத்தில் சுய உதவிக் குழுவிடம் இருந்து பெற்ற 50 ரூபாய் கள்ள நோட்டுகள் என்று வதந்தியை கிளப்பியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஆனால், அந்த ரூபாய் நோட்டுகளை சோதனை செய்ததில், அவை 2005-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நோட்டுகள் என்று தெரியவந்தது.

நாகை பெருமாள் கோவில் தாண்டவராயப் பிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (31). குளிர்பதனப் பெட்டி (பிரிட்ஜ்) மெக்கானிக்.

இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு நாகூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கு பழைய பிரிட்ஜை விலைக்குக் கொடுத்துள்ளார். அதற்கான தொகையை கொடுப்பதற்காக நேற்றுமுன்தினம் செந்தில் வெங்கட்ராமனுக்கு போன் செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து வெங்கட்ராமன் நாகூரில் உள்ள செந்திலின் வீட்டிற்குச் சென்று பிரிட்ஜிக்கான தொகை ரூ.4 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு வந்துள்ளார்.

செந்தில் கொடுத்தது அனைத்தும் 50 ரூபாய் நோட்டுகள்.

இதற்கிடையே வெங்கட்ராமனின் மனைவி அனிதா ஏற்கனவே ஆன்லைன் மூலம் புக் செய்திருந்த பொருள் வந்துவிட்டதாகவும், அதனை உரிய பணம் செலுத்திப் பெற்று கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட ஆன்லைன் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.

அதனையடுத்து அந்த அலுவலகத்திற்குச் சென்ற வெங்கட்ராமன், செந்திலிடம் இருந்து வாங்கி வந்த பணத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 400-ஐ கட்டிவிட்டுப் பொருளை வாங்கி வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்தவுடன் ஆன்லைன் அலுவலகத்தில் இருந்து போன் வந்துள்ளது. போனில் பேசிய ஆன்லைன் அலுவலக ஊழியர், வெங்கட்ராமனிடம் தாங்கள் கொடுத்த 50 ரூபாய் நோட்டுகளில் 43 நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்று கூறியுள்ளார்.

உடனே அந்த அலுவலகத்திற்குச் சென்ற வெங்கட்ராமன் அந்த நோட்டுகளைப் பெற்று அதற்கான எந்திரத்தில் சோதனை செய்துள்ளார். அப்போது அந்த எந்திரத்தில் பீப் சப்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கட்ராமன், உடனே செந்திலுக்கு போன் செய்து கேட்டுள்ளார்.

அதற்கு செந்தில், தனது மனைவி சுய உதவிக்குழுவில் இருந்து கடன் பெற்று வந்த பணம் தான் அது என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த நாகை உதவி ஆட்சியர் கண்ணன், நாகை நகர காவலர் வெங்கட்ராமன் வீட்டிற்குச் சென்று அவரிடம் இருந்த 50 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு சோதனைக்கு எடுத்துச் சென்றனர்.

இதனையடுத்து நேற்று அந்த ரூபாய் நோட்டுகளை காவலாளர்கள் சோதனை செய்ததில், அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நோட்டுகள் என்பதும், அது கள்ள நோட்டுகள் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

மேலும், இந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாகையில் இந்த 50 ரூபாய் கள்ள நோட்டுகள் குறித்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, வந்தந்திகளை பரப்பாதீங்க ப்ளீஸ்.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!