குட்நியூஸ்.. அரசு பேருந்துகளில் இனி 5 வயது குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம்..!

By vinoth kumarFirst Published May 24, 2023, 10:46 AM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு மே மாதம் 5-ம் தேதி போக்குவரத்து துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார். அதில், மூன்று வயது குழந்தைகளுக்கு அரசு கட்டணம் வசூலிக்கப்படாதிருந்த நிலையில் இனி ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்தில்  கட்டணம் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். 

அரசு பேருந்துகளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என்று தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு மே மாதம் 5-ம் தேதி போக்குவரத்து துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார். அதில், மூன்று வயது குழந்தைகளுக்கு அரசு கட்டணம் வசூலிக்கப்படாதிருந்த நிலையில் இனி ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்தில்  கட்டணம் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். 

மேலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணிப்பதை தடுப்பதற்கு அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில், அரசு பேருந்துகளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே 3 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி பயணித்து வரும் நிலையில் வயது வரம்பு 5ஆக அதிகரித்துள்ளது. 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் அரை டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

click me!