வேன் மீது லாரி மோதிய கோர விபத்து - 5 கல்லூரி மாணவிகள் பலி

Asianet News Tamil  
Published : Mar 24, 2017, 05:30 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
வேன் மீது லாரி மோதிய கோர விபத்து - 5 கல்லூரி மாணவிகள் பலி

சுருக்கம்

5 college girls died in road accident

கன்னியாகுமரி அருகே கல்லூரி வேன் மீது லாரி மோதிய விபத்தில் 5 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சுக்காங்கோட்டை ஐயப்பா கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு என தனி தனியாக பேருந்துகள் இயக்கபடுகின்ற்ன. இந்நிலையில் வழக்கம்போல், கல்லூரி முடிந்ததும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தது.

புலியூர் குறிச்சி அருகே சென்றபோது வேனின் பின்னால் வந்த லாரி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில், வேனில் இருந்த மஞ்சு, சிவரஞ்சனி, தீபா, சங்கீதா உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.  

PREV
click me!

Recommended Stories

2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு.. அதுமட்டுமல்ல.. முக்கிய அப்டேட் கொடுத்த அமைச்சர் பெரியகருப்பன்!
அண்ணாமலையார் கோயிலில் அதிர்ச்சி! ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து தாக்கிக் கொண்டதால் பரபரப்பு! நடந்தது என்ன?