4 வயது பெண் குழந்தை பலாத்காரம் செய்து கொலை! 17 வயது சிறுவன் கைது!

 
Published : Dec 15, 2017, 03:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
4 வயது பெண் குழந்தை பலாத்காரம் செய்து கொலை! 17 வயது சிறுவன் கைது!

சுருக்கம்

4 year old girl raped and killed 17 year old boy arrested

திண்டுக்கல் அருகே 4 வயது பெண் குழந்தை பலாத்காரம் செய்து கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர், கெம்பேறிப்பட்டியைச் சேர்ந்த தம்பதிக்கு 4 வயது பெண் குழந்தை உள்ளது. தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்றுள்ள நிலையில், பாட்டியுடன் குழந்தை இருந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த குழந்தையை, பாட்டி ரேசன் கடைக்கு அழைத்து சென்றுள்ளார். ரேசன் கடை சென்று கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த வெள்ளைச்சாமியின் மகன் ராஜ்குமார், இரு சக்கர வாகனத்தில் வரவே, குழந்தையை அங்கன்வாடி மையத்தில் விட்டுவிடுமாறு, குழந்தையை இருசக்கரவாகனத்தில் பாட்டி அனுப்பி வைத்துள்ளார்.

குழந்தையை அழைத்து சென்ற ராஜ்குமாரோ, அங்கன்வாடி மையத்துக்கு செல்லாமல், கித்துப்பட்டி அருகே உள்ள மலைப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு குழந்தையை பாலியல் பலத்காரம் செய்து கொன்றுவிட்டு, குழந்தை அணிந்திருந்த கொலுசு, கம்மல் உள்ளிட்டவற்றை எடுத்து
சென்றுள்ளான்.

இதனைத் தொடர்ந்து குழந்தையைக் காணாமல் பெற்றோரும், உறவினர்களும் தேட துவங்கியுள்ளனர். பின்னர், அய்யலூரில் சுற்றிக் கொண்டிருந்த ராம்குமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது ராம்குமார், குழந்தையைக் கொன்று விட்டதாக கூறியுள்ளான். இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும்
உறவினர்கள் அவனை தாக்கி உள்ளனர். இதையடுத்து, ராம்குமாரை, வடமதுரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

போலீசார், ராம்குமாரை விசாரித்ததில், பாலியல் பலாத்காரம் செய்து குழந்தையைக் கொன்று விட்டதாக கூறியுள்ளான். மேலும் குழந்தையின் உடல் இருக்கும் இடம் குறித்தும் கூறியுள்ளான். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். மேலும், ராம்குமரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாகவும், சேலும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து வந்துள்ளான் என்பதையும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ராகுமாரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் திடீர்
சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அவர்கள் கலைந்து சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!