
தானிப்பாடி பகுதியில் போலி மருத்துவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
திருவண்ணாமலை அருகே உள்ள தானிப்பாடி பகுதியில் சிலர் போலியாக மருத்துவம் பார்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளும் படிப்பு சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன.
அப்போது, சவுந்திரராஜன், சையது மதர்ஷா, கிருஷ்ணவேணி, குமரேஷன் ஆகியோரது சான்றிதழ்கள் போலி என தெரிய வந்தது.
இதைதொடர்ந்து அவர்கள் 4 போரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.