கிளாம்பாக்கம் பகுதியில் உள்ள ஓட்டலில் க்ரில் சிக்கன், சிக்கன் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவையை தூண்டும் அரேபிய உணவுகள்
நவீன காலத்திற்கு ஏற்ப உணவுவகைகளும் பல பரிமாற்றங்களை பெற்று வருகிறது. அந்த வகையில், பிரைடு ரைஸ், சிக்கின் நூடுல்ஸ், தந்தூரி சிக்கன், சவர்மா என அரேபிய வகை உணவுகளுக்கு உணவு பிரியர்களிடம் வரவேற்பு அதிகமாக பெற்றுள்ளது. இதனால் வெளிநாட்டில் தயாரிக்கப்படும் புதுவகையான உணவுகள் தமிழகத்தில் குக்கிராமங்களுக்கும் சென்று சேர்ந்துள்ளது. இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விருப்பப்பட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இதனை பயன்படுத்தி பணம் பார்க்கும் ஓட்டல் உரிமையாளர்கள் சுகாதாரம் மற்றும் தரத்தை கோட்டை விட்டு விடுகின்றனர்.இதனால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டலில் சோதனை நடத்தி சீல் வைக்கும் சம்பவமும் அதிகரித்து வருகிறது.
வாந்தி, மயக்கம்- மருத்துவமனையில் சிகிச்சை
அந்த வகையில், சென்னை ஊரப்பாக்கம் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஹோட்டலில் சிக்கன் நூடுல்ஸ், க்ரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட கார்பெண்டர் மோகன் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு வாந்தி, பேதி,மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்துக்ரில் சிக்கன் சாப்பிட்ட நான்கு பேர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசரும், கூடுவாஞ்சேரி நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் கிளாம்பாக்கத்தில் ஹோட்டலில் உணவின் தரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்