மகிழ்ச்சி செய்தி !! சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி.. ஆனால் இவர்கள் வர வேண்டாம்..

By Thanalakshmi VFirst Published Sep 22, 2022, 3:10 PM IST
Highlights

புரட்டாசி மாத அமாவாசையொட்டி சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல செப்.23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

புரட்டாசி மாத அமாவாசையொட்டி சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல செப்.23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது.  இக்கோவிலில் பெளணர்மி மற்றும் அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வரும் வெள்ளிக்கிழமை பிரதோஷமும், ஞாயிற்றுக்கிழமை மகாளய அமாவாசை வழிபாடும் நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க: உயிரிழந்ததாக கருதப்பட்ட மூதாட்டி மீண்டும் உயிருடன் வந்தார்; ஊர் மக்கள் அதிர்ச்சி!!

இதையொட்டி செப்.23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 4 நாட்கள் மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால், காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:இன்றும் நாளையும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்

 

click me!