முதல்வர் கான்வாய்க்குள் புகுந்த இளைஞர்கள்- கடற்கரை சாலையில் பரபரப்பு!!

 
Published : Jun 17, 2017, 12:01 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
முதல்வர் கான்வாய்க்குள் புகுந்த  இளைஞர்கள்- கடற்கரை சாலையில் பரபரப்பு!!

சுருக்கம்

3 youngmen entered into CM convoy

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கான்வாய்க்குள் திடீரென ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள் நுழைந்தனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். இச்சம்பவத்தால், காமராஜர் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, போயஸ் கார்டனில் இருந்து தலைமை செயலகம் செல்லும்போது கான்வாய் பாதுகாப்பு பலமாக அமைக்கப்படும். இதில் மாநகர கமிஷனர், சட்டம் ஒழுங்கு மற்றும்போக்குவரத்து கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் அனைத்து பகுதியிலும் சென்று பாதுகாப்பு உறுதி செய்த பின்னர், அங்கிருந்து செல்வார்கள்.

ஜெயலலிதா செல்லும்போது, அந்த பாதை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்படுவதுடன், போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்படும். இடையூறு ஏற்படாமல், சாலை முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

தற்போது, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக உள்ளார். ஜெயலலிதா இருந்தபோது கொடுத்த பாதுகாப்பு அளவுக்கு இல்லாவிட்டாலும், கான்வாயில் செல்லும்போது, அவருக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் இருந்து தலைமை செயலகத்துக்கு புறப்பட்டார். காமராஜர் சாலையில், கண்ணகி சிலை அருகே கான்வாய் சென்று கொண்டிருந்தது.

அப்போது, எதிர் திசையில் ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள், திடீரென பாதுகாப்புடன் முதல்வர் எடப்பாடி சென்ற கான்வாய்க்குள் நுழைந்தனர். இதை சற்றும் எதிர்பாராத போலீஸ் உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அந்த வாலிபர்கள், போலீசாரிடம் சிக்காமல் வேகமாக தப்பி செல்ல முயன்றனர். அதற்குள் போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர், அண்ணா சதுக்கம் போலீசாரிடம், 3 பேரையும் ஒப்படைத்தனர்.

அந்த வாலிபர்கள் யார்...? எதற்காக முதலமைச்சரின் கான்வாய்க்குள் நுழைந்தனர்....? அவர்களின் நோக்கம் என்னவென்று தீவிரமாக விசாரிக்கின்றனர். முதல்வரின் கான்வாய்க்குள், பைக்கில் வந்த வாலிபர்கள் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சரின் பாதுகாப்புக்கு கமிஷனர் உள்பட அனைத்து போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதுபோன்ற பாதுகாப்பு பணியில் இருந்தபோதே வாலிபர்கள், பைக்கில் நுழைந்துள்ளனர்.

ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடந்து இருந்தால், காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு குறைப்பாடு என்றே குற்றம்சாட்டப்படும்.

PREV
click me!

Recommended Stories

அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!
அமெரிக்க வரி விதிப்பால் சிக்கலில் தமிழகத்தின் ஏற்றுமதித்துறை.. பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்