ஒரே நேரத்தில் 3 பேர் ஓட ஓட விரட்டி படுகொலை... கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்..!

Published : Jan 22, 2019, 10:30 AM IST
ஒரே நேரத்தில் 3 பேர் ஓட ஓட விரட்டி படுகொலை... கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்..!

சுருக்கம்

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். 

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள மா.பொ.சி.நகரை சேர்ந்த ஆகாஷ் (18), விமல் (21), சதீஷ்  (26) ஆகியோர் கடந்த 19-ம் தேதி இரவு கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை 8 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 2018ம் ஆண்டு கும்மிடிப்பூண்டியில் நடந்த கொலை ஒன்றில் விமல் மற்றும் சதீஷிற்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. மேலும், குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடையலாம் என்ற கோணத்தில் நீதிமன்றங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் நேற்று ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைய வந்த 5 பேரை சிப்காட் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களை பாதிரிவேடு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.  விசாரணையில், புதுகும்மிடிப்பூண்டி காளத்தி தெரு நடராஜ்(24), கும்மிடிப்பூண்டி காட்டுக் கொல்லை தெருவை சேர்ந்த நாகராஜ் (23), ஆத்துப்பாக்கம் பெருமாள் கோவில் தெரு மாதவன் (23), சித்தராஜகண்டிகை வினோத்குமார்(25), புதுகும்மிடிப்பூண்டி  ரிஸ்க் பாஸ்கர் (26) என்றும், கும்மிடிப்பூண்டி, அதை சுற்றியுள்ள பகுதியில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறில் தீர்த்து கட்டியதாக போலீசாரின் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?
Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!