ராணிப்பேட்டையில் அதிர்ச்சி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை.. காரணம் இதுதான்..!

Published : May 02, 2022, 01:52 PM IST
 ராணிப்பேட்டையில் அதிர்ச்சி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை..  காரணம் இதுதான்..!

சுருக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் காரை கிராம பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி குணசுந்தரி. இவர்கள் 2 மகன்களுடன் வசித்து வந்த நிலையில் மூத்த மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ராணிப்பேட்டை அருகே குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் காரை கிராம பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி குணசுந்தரி. இவர்கள் 2 மகன்களுடன் வசித்து வந்த நிலையில் மூத்த மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பன்னீர்செல்வத்தின் 2வது மகன் ரமேஷ் (30) கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ரமேஷ் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மீண்டும் மருத்துவமனைக்கு செல்லவிருந்த நிலையில் ரமேஷ் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால், 2 மகன்களையும் இழந்தததால் துக்கத்தில் இருந்த பன்னீர்செல்வம் மற்றும் குணசுந்தரி வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். 

இதனையடுத்து, 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஒரே நேரத்தில் 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!