Bear Attack Tenkasi: தென்காசியில் கரடி தாக்கி 3 பேர் படுகாயம்: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ

By Pothy RajFirst Published Nov 7, 2022, 10:39 AM IST
Highlights

தென்காசியின் மாவட்ட வனப்பகுதியில் கரடி தாக்கி 3 பேர் காயமடைந்தனர்.

தென்காசியின் மாவட்ட வனப்பகுதியில் கரடி தாக்கி 3 பேர் காயமடைந்தனர்.

தென்காசி மாவட்டம், கருத்திலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் வைகுண்டமணி. சமையல் மசாலா பாக்கெட் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை சிவசைலத்திலிருந்து, பெத்தான்பிள்ளைக்கை வியாபாரத்துக்காக சைக்கிளில் சென்றார்.

உருவாகிறது புதிய புயல்..? எந்த எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்.? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அப்போது சாலைஓரம் புதருக்குள் பதுங்கி இருந்த கரடி ஒன்று திடீரென வைகுண்டமணி மீது பாய்ந்தது, கடித்துக் குதறியது. வைகுண்டமணியை கீழே தள்ளி, அவர் மீது ஏரி, கரடி கடித்துக் குதறியது. 

கண்டா வர சொல்லுங்க.. கையோடு கூட்டி வாருங்க.. கரூர் எம்.பி. ஜோதிமணி குறித்து வைரலாகும் போஸ்டர்..!

வைகுண்டமணி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், சாலையில் சென்றவர்கள் வந்து, கரடி மீது கல்வீசி துரத்தினர். ஆனால், கரடி வைகுண்ட மணியைவிட்டு செல்லவில்லை, அப்பகுதி மக்களையும் மிரட்டியது. ஏராளமான மக்கள் திரண்டு கரடியை விரட்ட முயன்றபோது அவர்களை கரடி எதிர்த்து தாக்கியது. இதில் நாகேந்திரன், சைலேந்திரா ஆகிய இருவர் கரடி தாக்கி காயமடைந்தனர்.

இதையடுத்து, வனத்துறைக்கு மக்கள் தகவல் அளித்ததையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கரடி தாக்கி காயமடைந்த 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு வனத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தன்ர.

அமித் ஷா மகனுக்கு ஒரு சட்டம்.. பொன்முடி மகனுக்கு ஒரு சட்டமா? திமுகவுக்கு எதிராக சீறிய சி.வி. சண்முகம்..!

அதன்பின் வனத்துறையினர் கரடியைப் பிடிக்க வைத்த கூண்டில் நேற்று கரடி சிக்கியது.அந்த கரடியை எடுத்துச் சென்று தென்காசி மாவட்ட அடர்வனப்பகுதியில் வனத்துறையினர்விட்டனர்

click me!