
தமிழக அரசின் இணையதளம் 2வத நாளாக முடக்கப்பட்டது. இதனால், செய்தித்துறையின் செய்தி குறிப்புகள் மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யும் பணி பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான, www.tn.gov.in நேற்று முன் தினம், மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
நேற்று முன் தினம் காலை, இணையதளம் முடக்கப்பட்ட தகவல் அறிந்ததும், தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகள், இணையதளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். எனினும், பணி முழுமையாக நிறைவு பெறவில்லை.
இதனால், 2வது நாளாக நேற்றும், புதிய தகவல்களும், செய்தித் துறை சார்பில் வெளியிடப்படும், செய்திக் குறிப்புகள் மற்றும் புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யவில்லை.