
அரியலூர் அருகே 25 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலணிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரியர் ராஜா. இவரது மனைவி ஆர்த்தி அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் வேலை நிமித்தமாக வெளியூருக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது, வீட்டின் உள்ள சென்று பார்த்தபோது, பீரோவின் கதவு திறந்திருந்ததை கண்ட ஆர்த்தி பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து ஆர்த்தி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை செகரத்தினர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பூட்டிய வீட்டில் 25 சவரன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.