உதவிக் கேட்டு ஒரே நாளில் 224 மனுக்கள்; மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் பெற்றார்…

 
Published : Oct 24, 2017, 07:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
உதவிக் கேட்டு ஒரே நாளில் 224 மனுக்கள்; மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் பெற்றார்…

சுருக்கம்

224 petitions a day to help The recipient of the crowd meeting people ...

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உதவிக் கேட்டு ஒரே நாளில் 224 மனுக்கள் பெறப்பட்டன.

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் கதிரவன் தலைமைத் தாங்கினார்.

அதில், குடிநீர் வசதி, மின்வசதி, பட்டா, கல்வி உதவித் தொகை, ஓய்வூதியம், இலவச தையல் இயந்திரம், சலவைப் பெட்டி உள்பட பல்வேறு உதவிகளைக் கேட்டு, கோரிக்கைகள் அடங்கிய 224 மனுக்களை, மக்கள் கொடுத்தனர்.

அதனை பெற்றுக் கொண்ட ஆட்சியர் கதிரவன், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, மாற்றுத் திறனாளிகள் சார்பில், பர்கூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு ரூ.30000 மதிப்பிலான நவீன செயற்கை கால் வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், டி.ஆர்.ஓ. சாந்தி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு