இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு..

 
Published : Oct 24, 2017, 07:30 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
 இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு..

சுருக்கம்

jewel theft for women in chennai nungambakkam

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரண் நகையை பறித்து கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் ரேவதி என்ற பெண் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ரேவதி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் நகையை பறித்து கொண்டு சென்றனர். 

நகையை பறிக்கும்போது ரேவதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் ரேவதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இதைபார்த்த அங்கிருந்தவர்கள் மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்று விட்டனர். 

இதையடுத்து படுகாயமடைந்த ரேவதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு