
2017-க்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 2ல் தொடங்கி 31 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.
இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டார்.
இதில் முழு மதிப்பெண்கள் பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு...
வேதியியல் பாடத்தில் 1123 பேர் தலா 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கணிதம் பாடத்தில் 3656 பேர் தலா 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இயற்பியல் பாடத்தில் 187 பேர் தலா 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கணினி அறிவியல் பாடத்தில் 1647 பேர் தலா 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
வணிக கணிதத்தில் 2551 பேர் தலா 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
வரலாறு பாடத்தில் 336 பேர் தலா 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
பொருளாதார பாடத்தில் 1717 பேர் தலா 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.